தீவனூர் விநாயகர் கோவில் பிரமோற்சவம் ரத்து
ADDED :1737 days ago
திண்டிவனம்; தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இவ்வாண்டும் தமிழக அரசின் அறிவிப்பின்படி கொரோனா காலகட்டத்திலும் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் தினசரி நித்ய பூஜைகள், தீபாராதனை நடக்கும் என திருக்கோவில் நிர்வாகிகள் சகுந்தலா, மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்.