உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, பெருமாள் கருட சேவையில் காட்சியளித்தார். சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 32ம் ஆண்டு சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, பெரிய கருட வாகனத்தில் காட்சியளித்த பெருமாள், நேற்று, சிறு கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்து, கோவிலை வலம் வரச்செய்தனர். நாளை காலை, உபயநாச்சியார்களுடன் பெருமாளுக்கு சூர்ணோத்சவம் நடக்க உள்ளது. வரும், 18ல், வெண்ணெய்தாழி சேவை,19ல் திருத்தேர், 20ல் திருக்கல்யாணம், 21ல், 81 கலச சிறப்பு திருமஞ்சனம் ஆகிய உற்சவங்கள் நடக்கவுள்ளன. 21 முதல், 10 நாள், ராமநவமி உற்சவம் நடக்க உள்ளது. மே, 2ல் சப்தாபரணத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !