தில்லைவாழ் அந்தணர் குருபூஜை விழா
ADDED :1966 days ago
திருப்பூர் : தில்லைவாழ் அந்தணர் குருபூஜை விழா, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. அனைத்து சிவனடியார் திருக்கூட்டத்தினர் சார்பில், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, 63 நாயன்மாருக்கு, குருபூஜை வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி, 63 நாயன்மார்களில் முதலாவதாக உள்ள தில்லைவாழ் அந்தணர்கள் குருபூஜை விழா நேற்று நடந்தது.தில்லைவாழ் அந்தணருக்கு, சிவாச்சார்யர்கள் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். சிவனடியார் திருக்கூட்டத்தினர், தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம் பாராயணம் செய்து வழிபட்டனர்.