உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை

பெ.நா.பாளையம்: பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல அபிஷேக பூஜை நடந்தது.

சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த போது, அவருக்கு தாகம் ஏற்படவே, அனுவாவி மலையில் நின்று, முருகப் பெருமானை வேண்டினார். இதையடுத்து, முருகப் பெருமான், தனது வேலால் இம்மலையில் சுனையை ஏற்படுத்தி, அனுமனுக்கு நீர் வழங்கி, தாகம் தீர்த்த தலமாக இக்கோவில் விளங்குகிறது. கோவில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்., 25ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்தன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், மலைக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், கணபதி வேள்வி தொடங்கியது. 108 சங்குகளால் முருகனின் வேல் போல அலங்கரிக்கப்பட்டு, சங்கு பூஜை நடந்தது. பின்னர், சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைக்கப்பட்ட கலசத்தை ஏந்தி, திருக்கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து, மூலவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, திருநீறு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, புதிதாக கோயில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில், செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டன. அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !