மூங்கில்பட்டில் 5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்
ADDED :1631 days ago
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டிஅடுத்த மூங்கில்பட்டில் ஐந்து கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு கிராமத்தில் உள்ள செல்வவினாயகர், லட்சுமி வரதராஜபெருமாள் கோவில், செம்பட வினாயகர் கோவில், அய்யனாரப்பன் கோவில், செங்கழனி மாரியம்மன் கோவில் ஆகிய ஐந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி கடந்த 16ம் தேதி மாலை கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடந்து 7.45 மணி முதல் 10.10 மணிவரை அனைத்து கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.மூங்கில்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.