திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராம நாம பாராயணம்
ADDED :1741 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கிழக்குவீதி, ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு, சத்சங்கம் சார்பில் ராம நாம பாராயணம் நடந்தது.
திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், சத்சங்கம் சார்பில், மாலை 6:30 மணிக்கு சீதா சமேத ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராம நாம பாராயணம் துவங்கப்பட்டது. சத்சங்க தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ராமன், செயலாளர் முரளிதர சுவாமிகள் முன்னிலை வகித்தனர். பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தனிமனித இடைவெளியுடன் ஒரு மணி நேரத்திற்கு ராம நாம பாராயணம் செய்தனர்.