அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி
ADDED :1672 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவ ஐந்தாம் நாளான நேற்று இரவு மகிழமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழந்தருளிய உண்ணாமலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இதில் ஏராளமானா பக்தர்கள் வழிப்பட்டனர்.