வடமதுரை கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு
ADDED :1730 days ago
வடமதுரை : வடமதுரை பஜனை மட கோயில் தெருவில் உள்ள ராமர் கோயிலில் ராம நவமி நாளில் ஆண்டுதோறும் ரத ஊர்வலம் புறப்பட்டு 4 வீதிகள் வழியே நகரை வலம் வரும். நடப்பாண்டில் கொரோனா தொற்று பரவல் பிரச்னையால் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. கோயில் வளாகத்திலேயே சிறப்பு வழிபாடுகள் நடத்தி, சமூக இடைவெளியுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்சி ரோடு பக்த ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன.