அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி வழிபாடு
ADDED :1672 days ago
சின்னாளபட்டி : ராம நவமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக உற்சவர் கோதண்டராமர், சீதை, லட்சுமணருக்கு, திரவிய அபிேஷகத்துடன் விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. யாகசாலை பூஜையில், பஞ்ச சுக்தம், ராம மூல மந்திர ேஹாமம், பூர்ணாகுதியுடன் மகா தீபாராதனை நடந்தது. ஊஞ்சல் உற்சவத்துடன் வைரமுடி ஆராதனை நடந்தது.மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், ராம நவமி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.