சிதம்பரம் ராமர் கோவிலில் ராமநவமி விழா
ADDED :1672 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. சிதம்பரம் ராமர் கோயில் மற்றும் எல்லையம்மன் கோவில் நேற்று ராமநவமி விழா நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த விழாவில் விஜய மகா மந்திரம் ராமன் சஹஸ்ரநாமம் சொல்லி வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட அர்ச்சகர் புரோஹித் சுவாமி ரமேஷ் ஆனந்த சித்தர் பங்கேற்று அருளாசி வழங்கினார். மாநில பிரமுகர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், இணை அமைப்பாளர் சசிகுமார், சிதம்பரம் முரளிதரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் சரவணன், நடன ஆசிரியர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.