ஸ்தலசயன கோவிலில் ராமநவமி உற்சவம்
ADDED :1671 days ago
மாமல்லபுரம் - மாமல்லபுரம் கோவில்களில், ராம நவமி உற்சவம் நடந்தது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ராமருக்கு, ஏகாந்த திருமஞ்சனம் நடத்தி, நைவேத்யம் படைத்து, வழிபாடு நடந்தது. இவ்வூர், பக்த ஆஞ்சனேயர் கோவிலில், காலை, மூலவர் சிறப்பு அபிஷேக, திருமஞ்சன வழிபாடு நடந்தது.பட்டாபிஷேக அலங்காரத்தில், ராமர், லட்சுமணர், சீதை மற்றும் உற்சவ ஆஞ்சனேயர் அருள்பாலித்தனர். பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். மாலை, ஊஞ்சல் சேவையாற்றினர்.