உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாசரதி ராமன் கோவிலில் ராம நவமி விழா

தாசரதி ராமன் கோவிலில் ராம நவமி விழா

 ராமன்கோவில்- ராமன்கோவில் ஊராட்சியில் உள்ள கல்யாண ராமன் கோவிலில், நேற்று, ராம நவமி விழா நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், ராமன் கோவில் ஊராட்சியில் உள்ளது 3,500 ஆண்டுகள் பழமையான தாசரதி கல்யாண ராமன் கோவில். இந்த கோவிலில் நேற்று, ராமநவமி விழாவை முன்னிட்டு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.காலை, 10:௦௦ மணிக்கு, அபிஷேகங்கள் துவங்கி, பின், சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுகக்கு அருள்பாலித்தார் ராமபிரான்.இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், தங்கள் வீடுகளில் திருமணம் நடைபெற வேண்டி, சிறப்பு பூஜைகள் செய்தால், திருமண தடை நீங்கும் என்பதால் பலர் இந்த கோவிலின் சிறப்புகளை அறிந்து வந்து செல்கின்றனர் என, இந்த கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வரும் தாசரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !