ராம நவமியையொட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை
ADDED :1671 days ago
தர்மபுரி: ராமநவமியையொட்டி, தர்மபுரியிலுள்ள ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, உற்சவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், முத்தம்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோக் கணவாய் ஆஞ்சநேயர் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், மொடக்கேரி வீர ஆஞ்சநேயர் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.