உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தர காமிக ஆகமம் - அறிமுகம்

உத்தர காமிக ஆகமம் - அறிமுகம்

எங்கும் நிறைந்த பரம்பொருளான ஈஸ்வரன் எல்லா ஆன்மாக்களும் உய்ய வேண்டி கருணையினாலே இருபத்தெட்டு (28) சிவாகமங்களை அருளிச் செய்தார். இந்த இருபத்தெட்டு மூலாகமங்களில் காமிகாகமம் என்பது முதலாவது ஆகும். அந்த மூலாகமம் பூர்வபாகம், உத்தரபாகம் என்று இரு பிரிவாக இருக்கின்றது. உத்தர காமிக ஆகமத்தில் 98 படலங்கள், 7128 ஸ்லோகங்கள் உள்ளன. உத்தர காமிக ஆகமம் த்வார பூஜையை ஆரம்பித்து, உத்ஸவ விதி, பாதபூஜா விதி, தீக்ஷ்õ விதி, பிராயஸ்சித்த விதி, பீடபிரதிஷ்டை, பாணலிங்க பிரதிஷ்டை, காம்யலிங்க பிரதிஷ்டை, ஸகல தேவதா பிரதிஷ்டைகள், ரதாதி ஸ்தாபனங்கள், பிரதிஷ்டை படலங்கள், சகலவிதமான தானங்கள், விவரமாக கூறி திருக்கோயில்களில் செயல்பட வேண்டிய காரியங்களை வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது. பல சுலோகங்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை வலியுறுத்தி விவரமாக கூறப்பட்டிருக்கிறது.

நன்றி:
வி. விச்வநாத சிவாச்சாரியார்.
உத்தர காமிக ஆகமம்
வெளியீடு: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !