இரவு வரை அன்னதானம்: தயாராகும் பழநி மலைக்கோயில்!
ADDED :4870 days ago
பழநி:பழநி மலைக்கோயிலில் காலை முதல் இரவு வரை, அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மலைக்கோயிலில், தற்போது மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை, அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள, உணவு தயாரிக்கும் நீராவி கொதிகலன் அடுப்புகளை, தனியார் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதுகுறித்து மலைக்கோயில் அலுவலர் ஒருவர் கூறுகையில், ""ஏற்கனவே, ஒரு நீராவி கொதிகலன் அடுப்பு உபயோகத்தில் உள்ளது. அரசின் அறிவிப்பிற்கு பின், காலை 8 மணி முதல் இரவு 9 வரை அன்னதானம் வழங்கப்படும், என்றார்.