ஞாயிறில் கரபுரநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ADDED :1663 days ago
வீரபாண்டி: ஞாயிறில் முழு ஊரடங்கால், கரபுரநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவில் செயல் அலுவலர் சங்கர் கூறியதாவது: கொரோனாவால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வரும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று, கோவிலில் பதிவு செய்த திருமணங்கள் நடத்த தடை இல்லை. அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கையில் உறவினர்கள் பங்கேற்கலாம். ஆனால், பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை. வழக்கம்போல், சிவாச்சாரியார்கள் மூன்று வேளை பூஜை நடத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.