கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
ADDED :1728 days ago
கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலை 10 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாப்பிள்ளை அழைப்பு, சடங்கு உற்ஸவம் எளிமையாக நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
உச்சிப்புளி அருகே அரியமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. யாகசாலை பூஜையில் வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணியளவில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடையுடன் காட்சி தந்தார். மீனாட்சியின் கழுத்தில் மாங்கல்ய நாண் பூட்டப்பட்டது. பக்தர்கள் மீது அட்சதை தூவப்பட்டது. முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.