உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி பூஜை முறையும் பலனும்..!

சித்ரா பவுர்ணமி பூஜை முறையும் பலனும்..!

சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும் அவ்வகையில், சித்ரா பவுர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பவுர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள். சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்ரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாளான சஷ்டி அன்று விரதம் இருந்து, அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் (முருகனுக்கு சிவனாரால் அருளப் பெற்ற) திருக்கதையைப் படிப்பது விசேஷம். இதனால் நம் பாவச்சுமைகள் குறையும் என்பது ஐதீகம்.

பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது   விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து

சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி  ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர்   இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி   ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே   நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !