உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம்: கொரொனா பரவால்ல அச்சம் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் மூடப்பட்டுள்ள நிலையில் கீழவீதி கோபுரவாயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதிப்புக்கு உள்ளானவர் அதிகரித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிகளை விதித்து வருகிறது. இன்று முதல் கோவில்கள் வணிக வளாகங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு மேற்கு வடக்கு ஆகிய வீடுகளின் வாயில்கள் மூடப்பட்டது. தொடர்ந்து கீழவீதி கோபுர வாயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கோவிலுக்குள் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் பொது தீக்ஷிதர்கள் சுவாமி பூஜை செய்ய உள்ளே சென்றுவர எவ்வித தடையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !