திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
ADDED :1723 days ago
காரைக்கால்:காரைக்காலில் முழு ஊரடங்கு உத்தரவால் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் குறைந்த பக்தர்களே தரிசனம் செய்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று சனிக் கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் ஆலயத்தில் பக்தர்கள் ஒருசிலர் மட்டும் தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய வராத நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து சிலபக்தர்கள் மட்டுமே வந்தனர்.முன்னதாக பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின், முககவசம் அணிந்து, கிருமி நாசினி மூலம் கைகளை துாய்மை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி நளன் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு என்பதால் பல ஓட்டல்கள், டீக்கடைகள் மூடியதால் வெளிமாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.