உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு

ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு

உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


இந்த புனிதமான ஏகாதசி விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றாகும். இந்த நாளில் விரதம் இருப்பது பாவங்களை நீக்குகிறது, அமைதியை அளிக்கிறது மற்றும் தெய்வீக ஆசிகளைத் தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை ஆறுகளுடன், மறைந்துபோன சரஸ்வதி நதியும் சந்திப்பதாக நம்பப்படுகிறது. இந்த திரிவேணி சங்கமத்தில் இன்று ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்து வருகின்றனர். நிர்வாகத்தின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் அப்பகுதியைக் கண்காணித்து வருகின்றனர்.


இதேபோல், ஹரித்வார், உத்தரகாண்டில் ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு, ஹர் கி பௌரியில் உள்ள கங்கை படித்துறையில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 


மேற்கு வங்கம்: தெற்கு 24 பர்கானாஸ், 2026 ஆம் ஆண்டு மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் கங்கை நதியில் நீராடுவதற்காக கங்காசாகருக்கு வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !