உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறில் முப்பெரும் விழா கவர்னருக்கு ஆதீனம் அழைப்பு

திருநள்ளாறில் முப்பெரும் விழா கவர்னருக்கு ஆதீனம் அழைப்பு

காரைக்கால்: புதுச்சேரி, காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில், சனி பகவான் சன்னிதியில், சனிபெயர்ச்சி விழா, மார்ச் 6ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 8:24 மணிக்கு கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, சிறப்பு வழிபாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்ய தருமை ஆதீன பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றது. இக்குழுவினர், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்தனர். அப்போது, சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறில், பிப்., 22ம் தேதி கஜ பூஜை, கோ பூஜை, புகழ் பெற்ற புனித நதிகளின் தீர்த்த யா த்திரை, அகில இந்திய ஜோதிடர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி என, முப்பெரும் விழா நடக்கிறது. இதில், முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், முதல்வர்கள், நீதிபதிகள், ஜோதிட வல்லுநர்கள், வானியல் நிபுணர்கள், சிவாச்சாரியார்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !