உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை
ADDED :7 minutes ago
சங்கராபுரம்: பெருமணம் கிராமத்தில் உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. சங்கராபுரம் அடுத்த பெருமணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. உலக மக்கள் நலன் வேண்டி பெரியாண்டவர், பூர்ண புஷ்கலாம்பாள் சுவாமிக்கு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப்பின் அன்னதானம் வழங்கப்பட்டது.