கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருத்தேர் உற்சவம்
ADDED :1630 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருத்தேர் விழா, கொரோனா பரவலையொட்டி கோவில் வளாகத்திலேயே நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்துடன், சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் உற்சவ மூர்த்திகளை எழுந்தருள செய்து கோவில் வளாகத்திற்குள் வடம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழா மற்றும் விடையாற்றி உற்சவம் நடந்தது. தேசிக பட்டர் பூஜைகளை செய்தார்.