தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் பக்தர்கள் வழிபட தடை
ADDED :1631 days ago
தேவிபட்டினம்: கொரோனா அச்சம் காரணமாக அரசு உத்தரவின்படி தேவிப்பட்டினம் நவபாஷாணம் மூடப்பட்டது.
தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உட்பட பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், இங்கு பரிகார பூஜைகள் செய்யப்படுவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நவபாஷான கடற்கரை கோவில் நிர்வாகத்தால் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது. இதனால் நவபாஷாண கடற்கரை வெறிச்சோடி காணப்படுகின்றன.