உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராம பஜனை சபா சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம்

ஸ்ரீராம பஜனை சபா சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம்

திருப்பூர்: ஸ்ரீராம பஜனை சபா சார்பில், 65வது ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம் கோலாகலமாக நடந்தது.


திருப்பூர் முன்சீப் சீனிவாசபுரம் ஸ்ரீராம பஜனை சபாவில், ஆண்டுதோறும் ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், அஷ்டபதி பஜனையுடன் ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம் துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு, திவ்ய நாம பஜனை, டோலோத்ஸவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள் திரளாக பங்கேற்ற உஞ்சவிருத்தி நடந்தது. காலை, 10:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாண உற்சவம், சிறப்பு பஜனையுடன் கோலாகலமாக நடந்தது; மகா தீபாராதனையை தொடர்ந்து, ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்றது. சென்னை அஸ்வின் குமார் பாகவதர் உள்ளிட்டோர் பஜனையும், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன.ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !