உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா

‌வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா பக்தர்களின்றி நடந்தது.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் பால்கேணிமேடு சென்று மண்டூக முனிவருக்கு பெருமாள் வரம் அளிப்பார். தொடர்ந்து நகரின் பல்வேறு திருக்கண்களில் 3 நாட்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா தொற்று பிரச்னையால் தற்போது பக்தர்களுக்கு தரிசன அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை வேதபாராயணம், சாற்றுமறை வழிபாடு முடிந்து குதிரை வாகனத்தில் பெருமாள் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அர்ச்சகர்கள், சீர்பாதங்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !