உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை பவுர்ணமி விழா

தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை பவுர்ணமி விழா

மேட்டுப்பாளையம்: சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், தேவி கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும், தேவி கருமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்தனர். இப்பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பூசாரிகள் மட்டுமே அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !