அப்புகோடு ஆனந்தமலை கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு
ADDED :4869 days ago
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் 17ம் தேதி காலை 10.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பி.மணியட்டி சுசீலா, குருத்துக்குளி நன்மணி லட்சுமணன் குழுவினரின் பஜனை, 12.00 மணிக்கு தஞ்சை அருளாளர் ஆனந்த சித்தரின் அருளுரை, 12.30மணிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆருகுச்சி பெள்ளனின் ஆன்மிக சொற்பொழிவும், மதியம் 2.15 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்துள்ளார்.