உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக தர்ம சாஸ்தா வழிபாடு

உலக நன்மைக்காக தர்ம சாஸ்தா வழிபாடு

கோவை: உலக நன்மைக்காக, ஸ்ரீதர்ம சாஸ்தாவுக்கு, இரண்டு நாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஹரிகரபுத்ர ஸந்தர்ப்பனை வைபவம், வரும் 15ம் தேதி, கோவையில் நடக்கிறது. சாஸ்தா மூலமந்திர உபதேசம் பெற்ற, 120 உபாஸகர்களை, ஒரே இடத்தில் கூட்டி, அவர்களையே இறைவனாக பாவித்து பூஜை நடத்தப்படுகிறது. 600 ஆண்டுகளுக்கு பிறகு, கோவையில் இது நடக்கிறது. அடுத்தநாள், சாஸ்தா ப்ரீதி பூஜை துவங்குகிறது. இந்த பூஜை, பழைய சம்பிரதாயப்படி நடத்தப்படுகிறது. காலை 11.30 மணிக்கு தீபாராதனைக்கு பின் பரிவார கணங்களுக்கும், ஹரிகரபுத்ர சுவாமிக்கும், மங்கள ஸ்னானம் நடைபெறும். மறுநாள் சபரிமலையில், ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும், லட்சார்ச்சனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீமகாசாஸ்த்ரு சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !