உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் தரிசன கட்டணம் ரத்து செய்ய கோரிக்கை

கோவில் தரிசன கட்டணம் ரத்து செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி: தமிழகத்தில், கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய  வலியுறுத்தி 30 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறுவது, என, இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சியில், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்துமுன்னணி சார்பில் இந்து சாம்ராஜ்ய தினத்தையொட்டி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய நான்கு ஒன்றியங்களுக்குட்பட்ட 51 இடங்களில் கொடியேற்று விழா நடத்த வேண்டும். அனைத்து கோவில்களில்களிலும், தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில், இதுவரை 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரம் கையெழுத்து பெற வேண்டும். கோவிலில், தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜூலை 22ம் தேதி மாநில அளவில் கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரம் பேர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !