வேடசந்துாரில் உருவாகும் லிங்கேஸ்வரா கோயில்
ADDED :1726 days ago
வேடசந்துார் : கூவக்காபட்டி ஊராட்சி சுப்பிரமணிய பிள்ளையூர் அருகே, லிங்கேஸ்வரா ஆலயம் (சிவன் கோயில்) கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் இந்தப் பணிகளை, வேடசந்துார் சுற்றுப்பகுதியை சேர்ந்த சிவ பக்தர்கள் ஒன்று சேர்ந்து கவனிக்கினறனர்.இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: இது போன்ற லிங்கேஸ்வரா ஆலயம் (சிவன் கோயில்) தமிழகத்திலேயே எங்கும் கிடையாது. மஹாராஸ்டிரா மாநிலத்தில் தான் உள்ளது. அதை வாட்ஸ் ஆப்களில் பார்த்து, பார்த்து அதே வடிவில் கட்டி வருகிறோம். விரைவில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது என்றனர்.