சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் தசாவதாரம்
ADDED :1665 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் சுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்தானது. நேற்று இரவு பக்தர்கள் இன்றி கோயில் சன்னதியில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்கார பூஜைகளை ரகுராம் பட்டார் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சத்யநாராயணன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.