உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எடுத்தனூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!

எடுத்தனூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே எடுத்தனூரில் மாணிக்க விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (14ம் தேதி) நடக்கிறது.சங்கராபுரம் வட்டம் எடுத்தனூர் கிராமத்தில் மாணிக்க விநாயகர், மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், மகா கணபதி ஹோமம், கோபூஜையும், மாலை 5 மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 5 மணிக்கு 2ம் கால யாக பூஜையும், தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனையை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு சாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !