பாண்டுரெங்கநாத ஸ்வாமி கோவிலில் மண்டல பூஜை!
ADDED :4963 days ago
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, மாணிக்க வாசகம் தெருவில் பிரஸித்தி பெற்ற பாண்டுரெங்கநாத ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. ஜூலை 18ம் தேதி வரை நடக்கும் மண்டல பூஜையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. ஒவ்வொரு நாளும், பக்தி இன்னிசை கச்சேரி, வயலின், மிருதங்கம், பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.