மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகருக்கு புஷ்ப பல்லக்கு சேவை
ADDED :1722 days ago
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று (ஏப்.,30) கள்ளழகருக்கு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் ஏப்.,27 ல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பச்சை பட்டுடுத்தி அழகர் அருள்பாலித்தார். விழாவில் இன்று காலை கள்ளழகருக்கு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெற்றது. கோயில் பிராகாரத்தில் கள்ளழகர் உலா வந்து அருள்பாலித்தார். பூஜை நேரம், வீதி உலா நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.