சேஷ வாகனத்தில் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் உலா
ADDED :1720 days ago
வடமதுரை: வடமதுரையில் சித்ரா பவுர்ணமி விழாவின் 3ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் சவுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார்.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் பால்கேணிமேடு சென்று மண்டூக முனிவருக்கு பெருமாள் வரம் அளிப்பார். தொடர்ந்து நகரின் பல்வேறு திருக்கண்களில் 3 நாட்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா தொற்று பிரச்னையால் தற்போது பக்தர்களுக்கு தரிசன அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழாவின் 3ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் சவுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அர்ச்சகர்கள், சீர்பாதங்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.