சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு
ADDED :1659 days ago
சேலம்: அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சப்தாபரண உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் மலர் மாலைகளுடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.