நற்பண்புகளை வளர்ப்போம்!
ADDED :1674 days ago
சில நேரத்தில் தவறுகளைச் செய்ய நாம் துணிந்து விடுவோம். யாரும் நம்மை கண்காணிக்கவில்லை. சாட்சியும் யாரும் இல்லை என்பதே இதற்கு காரணம். ஆனால் சிலர் யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஆண்டவர் என்னைக் கண்காணித்து கொண்டிருக்கிறார். நான் தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என தீர்மானமாக இருப்பார்கள். ஆண்டவருக்கு பயந்து வாழ்நாளெல்லாம் உண்மவழியில் நடப்பேன். இப்படி எந்த சூழ்நிலையிலும் நீதி, நேர்மையுடன் வாழ்பவர்களே ஒளி பெற்ற மக்களாவர்.
மனிதன் தன்னுடைய நடத்தையில் கருத்தாக இருக்க வேண்டும். பொய்மை, திருட்டு, களவு, வஞ்சகம் போன்ற தீய பண்புகளை புறக்கணிக்க வேண்டும். உண்மை, ஒழுக்கம், அடக்கம், பணிவு, பொறுமை போன்ற நற்பண்புகளை பின்பற்றி ஔி பெற்ற மக்களாக வாழ வேண்டும்.