புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் தாராபிஷேகம்
ADDED :1941 days ago
பெண்ணாடம் : அக்னி நட்சத்திரத்தையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் தாராபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, விக்னேஸ்வர பூஜையும், 10:30 மணியளவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, தாரா கலசத்தில் புனித நீர் நிரப்பி பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்தனர்.