ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1661 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது. மே.,4 கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜைகளை தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால பூஜை நடந்தன. வேத மந்திரங்கள் ரமேஷ் பட்டர் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அகஸ்தியர் ஆலய உலக நல சித்தானந்த ஞான சபா அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.