திருவாமூர் அப்பர் சதய உற்சவம் ரத்து
ADDED :1610 days ago
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் சதய உற்சவ விழா கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த திருவாமூரில் நாயன்மார்களில் முதன்மையான அப்பர் பிறந்த ஊரில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் சதய திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு சித்திரை மாத சதயம் நட்சத்திரம் இன்று உள்ள நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக சதய திருவிழா நடத்துவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதனால், பக்தர்கள் இன்றி ஆகம விதிப்படி பூஜை நடக்கும்.கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.