குறவர் சாமி சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
பெரம்பலுார்: குறவர் இன குல தெய்வ சிலைகளை, கடலில் வீசி ஒரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்ட இந்து முன்னணி செயலர் செல்வகுமார் தலைமையில் S காரை மலையப்ப நகரைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிராமம் ஆவடி லட்சுமி நகரில் வசித்து வரும், குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தற்போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதோடு, நாங்கள் காலங்காலமாக வணங்கிவரும் குல தெய்வ சிலைகளை கடலில் போட்டதுடன், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குறவர் இன குல தெய்வ சிலைகளை கடலில் வீசியவரை கைது செய்து, அந்த சிலைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.