கோயில் வாசலில் நின்று வழிபடும் பக்தர்கள்
ADDED :1613 days ago
பழநி : பழநியில் கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு செலுத்தி வருகின்றனர்.
ஆன்மிக நகரமான பழநி கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி இல்லை. இந்நகரில் உள்ள பலரும் தினமும் அன்றாட பணிகளில் ஈடுபடும் முன், கோயிலில் வழிபட்ட பிறகே பணிகளை துவங்குகின்றனர்.வாரம்தோறும் செவ்வாய், வியாழன் சனிக்கிழமைகளிலும், சஷ்டி, பிரதோஷம், கார்த்திகை போன்ற சிறப்பு நாட்களிலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனம் செய்வர். பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடும் வகையிலும் தினமும் பலர் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கோயில்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பதில்லை. இதனால் வேறு வழியின்றி திருஆவினன்குடி கோயில், பாத விநாயகர் கோயில்களின் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.