உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் உபதேசித்த ‘கீதை’

ராமர் உபதேசித்த ‘கீதை’


தம்பி கும்பகர்ணன், மகன் மேகநாதன் உள்ளிட்ட அனைவரையும் இழந்தான் ராவணன். இறுதியாக தானே நேரில் ராமனோடு போர் புரியத் தயாரானான். யுத்த ரதம் என்னும் தேரில் ஏறி போர்க்களத்திற்குப் புறப்பட்டான். இதை அறிந்த விபீஷணனைப் பயம் தொற்றியது.
 “அனைத்து ஆயுதங்களையும் தாங்கிக் கொண்டு கோபமுடன் புறப்படும் ராவணன் முன், ஒரு வில்லை மட்டும் ஏந்திய படி நிற்கும் ராமர் வெற்றி பெறுவாரோ மாட்டாரோ?” என்ற சந்தேகம் எழுந்தது.
விபீஷணன் தன் மீது கொண்ட அன்பினால் பயப்படுவதை உணர்ந்தார் ராமர். ‘தர்மமே வெல்லும்’ என்னும் உண்மையை எடுத்துரைத்தார். இதுவே ‘விபீஷண கீதை’ எனப் பெயர் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !