உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்பட்டில் வலம் வந்த காரமடை அரங்கநாத பெருமாள்

வெண்பட்டில் வலம் வந்த காரமடை அரங்கநாத பெருமாள்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் சித்திரை மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலசந்தி பூஜையை தொடர்ந்து, புண்ணியாகவாசனம், கலச ஆவாஹனம் திருமஞ்சனம் ஆகிய நிகழ்ச்சிகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திக்கு நடந்தன. வெண்பட்டு உடுத்தி, வெண்பட்டு குடையுடன் திருக்கோவில் வளாகத்தில், உற்சவமூர்த்தி அரங்கநாத பெருமாள் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். உச்சிகால பூஜை முடிந்து, ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் சாற்றுமுறை சேவித்தார்கள். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், பச்சை பட்டு உடுத்தி, அரங்கநாதருடன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அரசு விதிமுறைப்படி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !