கொரோனாவிலிருந்து காக்க கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு யாகம்
ADDED :1620 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். இந்த நோய் தொற்று தாக்குதலிருந்து மக்களை காப்பற்ற வேண்டி ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தன்வந்திரி யாகம் நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியர்கள் மட்டும் பங்கேற்றனர், பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.