ரமலான் சிந்தனைகள் - 26: கருணையின் வடிவம்
ADDED :1612 days ago
ஒருமுறை நாயகம், தாயிப் என்னும் நகருக்கு இறைப்பணிக்காக சென்றிருந்தார். அந்த ஊர் தலைவனான அப்தயலீல் என்பவனுக்கு இது பிடிக்கவில்லை. அவரை தாக்க அடியாட்களை அனுப்பினான். அடியாட்களும் கல்லெறிந்து தாக்கினர். அடிபட்டதில் நாயகம் கீழே விழுந்தார். அப்போது ஒரு வானவரை அனுப்பி வைத்தான் இறைவன்.
இறைத்துாதரே! தாங்கள் அனுமதித்தால் தாயிப் நகரில் வாழும் மக்களை தண்டிக்கிறேன் என்றார். கருணையின் வடிவமான நாயகம், வேண்டாம். இதை இப்படியே விட்டு விடுங்கள். அவர்களின் சிலரது உள்ளத்தையாவது இறைவன் நேர்வழியில் திருப்பி விடக்கூடும். அல்லது அவர்களின் வம்சத்தினராவது நல்வழியில் நடப்பர் என்றார்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:05 மணி.