சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :1607 days ago
திருவாடானை: சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோயில்களில் சித்திரை சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.