வெறிச்சோடிய திருப்பதி ஏழுமலையான் கோவில்
ADDED :1607 days ago
திருப்பதி: தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில், தற்போது ஊரடங்கு மற்றும் கொரோனா பீதி காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
வைணவ ஆலயங்களில் புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் முக்கியமான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு, தினந்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு மற்றும் கொரோனா பீதி காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.